+44 (0) 2477113598 +44 (0) 7740100981 +44 (0) 7480757792

நுண்கலை தேர்வுகள்

அனைத்துப் பள்ளி நிர்வாகிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வணக்கம்.

உலகம் முழுவதும் தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருந்த சர்வதேச கல்வி பேரவை (Griffin College London) நடாத்தும் அணைத்து நுண்கலை தேர்வுகள் பிற்போடப்பட்டுள்ளது என்று 19/03/2020 அன்று பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அறிவிக்கப்பட்டது.

இந்த இடர்மிகு நிலையிலும், எம் மாணவச் செல்வங்கள், உயிரினும் மேலான எமது பாரம்பரிய நுண்கலைகளை இடைவிடாது கற்பதற்கு வழிகாட்டி உதவுமாறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் வேண்டிகொள்கின்றோம்.

இவ்வாண்டு ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் (அறிமுறை மற்றும் செயல்முறை) நுண்கலை தேர்வுகள் செப்டம்பர் 2020 நடைபெறும்.

டிசம்பர் 2020 நடைபெறவிருக்கும் நுண்கலை தேர்வுகள் வழமை போல் டிசம்பர் மாதம் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

டிசம்பர் மாதம் தேர்வுக்கான விண்ணப்பப்படிவத்தை அக்டோபர் 15ம் திகதிக்குள் சர்வதேச கல்வி பேரவைக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தங்களின் ஆதரவிற்கு நன்றி.

Dr Padma Rahulan
நிறுவனர் – சர்வதேச கல்வி பேரவை (Griffin College London)